பாப்பம்பட்டியில் 71 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா

சிகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற 71ஆம் ஆண்டு சுதந்திரதின விழா பாப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முற்பகல் விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.நஞ்சப்பன் அவர்கள் தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு.மனோகரன், சிகரம் அமைப்பின் நிறுவனர் திரு.விஸ்வநாதன், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் திரு.சந்திரசேகர், திரு.பரமசிவம், ரங்கநாதன், பழனிச்சாமி, பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.ருக்குமணி, பள்ளி ஆசிரியர் திரு.கணேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவர்களின் தேசிய கொடி அணிவகுப்பு, பேச்சுபோட்டிளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பேச்சு, தேசிய பாடல்கள் மற்றும் மாணவர்களின் நடனங்களுடன் விழா சிறப்பாக நடைபெற்றது. இறுதியில் கலை இலக்கிய விளையாட்டுபோட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. இனிப்புகள் வழங்கி முற்பகல் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

பாப்பம்பட்டடி நூலக வளாகத்தில்
முன்னாள் ஆசிரியர்கள் திரு.ஆறுமுகம்
, திரு.தமோதிரன்,முன்னாள் வார்டு உறுப்பினர் சு.ரங்கநாதன் மற்றும் சிகரம் இளைஞர் குழு தலைவர் திரு.சேதுபதி அவர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது.

பிற்பகல் நிகழ்வு

இளையோர்க்கான கபடி போட்டி சிகரம் செயலாளர் திரு.ஆதிகணேசன் மற்றும் மக்கள் பாதை திருமதி விஜயலட்சுமி அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. கபடி போட்டியில் கள்ளப்பாளையம், பாப்பம்பட்டி, இடையபாளையம், செட்டிபாளையம்,பள்ளபாளையம், கண்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த பத்து அணிகள் கபடி போட்டியில் பங்கேற்றன. போட்டியினை மக்கள் பாதை நண்பர்கள் விக்னேஷ்,பாபு,மாதேவன்,பூதேஷ், பார்த்திபன், தினேஷ், புவனேந்திரன், விக்னேஷ்,அஞ்சலி, உஷாராணி, ரியாஸ், சித்ரா உள்ளிட்டோ் கபடி போட்டியினை சிறப்பாக நடத்தினர். 
கபடி போட்டியில் பள்ளபாளையம் ஜெமினி ஸ்போர்ட்ஸ் அணி முதல் இடம் பெற்றது. இரண்டாம் இடம் ஜெமினி ஸ்டார்ஸ் பெற்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. கால்பந்து போட்டியில் பாப்பம்பட்டி லோக்கல் பாய்ஸ் அணி முதல் இடம் பெற்றது. பொள்ளாச்சி அணி இரண்டாம் இடம் பெற்றது. கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கும் கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை சிகரம் அமைப்பை சார்ந்த கோகுல், ஜீவா, விஜயகுமார், தாமோதிரன், வேலுமணி, கார்த்திக்,ஆகாஷ், பிரகாஷ் உள்ளிட்ட சிகரம் நண்பர்கள் செய்திருந்தனர்.