நெகிழ வைக்கும் நெகிழி

*நெகிழ வைக்கும் நெகிழி*
Performance of Plastic

நெகிழி என்னும் பிளாஸ்டிக்கை மற்றவர் போல என்னாலும் எதிரியாக பார்க்க முடியவில்லை. ஏன்னென்றால் நம் வாழ்வில் தினம்தினம் உபயோகிக்கும் அத்தியாவசியமான ஒரு அங்கம் அது.

பிளாஸ்டிக்கை வைத்து எத்தனை எத்தனையோ பொருட்கள். சட்டை பொத்தானிலிருந்து சாட்டிலைட் வரை நெகிழி இல்லாத இடமே இல்லை. நெகிழியின் பயன்பாடு அளவற்றது.

நாம் நெகிழியை சரியான முறையில் கையாளவேண்டும். நெகிழி ஒரு ஆகசிறந்த கண்டுபிடிப்பாகவே நான் கருதுகிறேன். நெகிழியை வளைக்கமுடியும், நெளிக்கமுடியும், உடைக்க முடியும், கிழிக்க முடியும், விரிக்க முடியும், சுருக்க முடியும், நிறங்கள் கொடுக்க முடியும். இப்படி பல பரிமானங்களை கொண்ட தனித்துவமான பொருள்.

நெகிழி ஒரு யானை போல சரியாக பயன்படுத்திக்கொண்டால் பல உபயோகம் உண்டு.

பிளாஸ்டிக்கை ஒழிக்கிறேன் பேர்வழிகள் செய்வது என்ன? ஒரு இடத்தில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து முறையாக குப்பை தொட்டியில் போடுவார். "ஆகா எப்படி பிளாஸ்டிக்கை ஒழித்தார் பார்த்தீர்களா"?. சரி குப்பைதொட்டியில் இருந்து அந்த பிளாஸ்டிக் என்ன ஆகிறது? பதில் உண்டா?

பிளாஸ்டிக்கை முறையாக எதுவெதற்க்கு பயன்படுத்த வேண்டுமென்று அறிந்து பயன்படுத்தவேண்டும். அதுபோல் மறுமுறை எதற்க்கு பயன்படுத்தலாம் என்று புரிந்து பயன்படுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு
ஒரு பிஸ்கெட் பாக்கெட்டையோ, சிற்றுண்டி பாக்கெட்டையோ பிரிக்கும்போதே சரியாக பிரித்தால் அந்த பிளாஸ்டிக் பையில் ஒரு விதையையே வளரவைக்கலாம். அந்த பையை கண்டவாறு கிழித்து வீசுவதால்தான் பிரட்ச்சனை. அப்படி கிழித்த பிளாஸ்டிக்குகளைகூட சேகரித்து ஒரு பெரிய பையில் அடைத்து அதை ஒரு இருக்கையாககூட செய்யலாம். இப்படியாக பிளாஸ்டிக்கை எப்படி ஆக்கபூர்வமாக மறுபயன்பாடு செய்வது என்று சிந்தனை செய்யவேண்டும்.

பிளாஸ்டிக்கை உருக்கி வேறு வடிவம் கொடுத்து புதிய பொருட்கள் செய்யலாம். உருக்கினால் காற்று மாசு பெரும் என்று கவலைபடாதீர்கள் நிறைய மரங்கள் இருந்தால் சிறு மாசு பெரிய காற்றில் கரைந்து போகும்... ஆகவே மரம் வளர்ப்பீர் பயன் பெருவீர்...